search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமல்லபுரம் கடற்கரை"

    • சூரிய உதயத்தில் ஒளிரும் கருப்பு மணல் பகுதியை பார்த்து உற்சாகம் அடைந்தனர்.
    • கடல் அலையில் இருந்து வெளிவரும் இந்த கருப்பு மணல் கடற்கரையில் படிந்து தார் சாலை போன்று காட்சி அளிக்கிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டு செல்கிறார்கள். சுற்றுலா வரும் பார்வையாளர்கள் மாமல்லபுரம் கடற்கரையில் பொழுதை கழிப்பது வழக்கம்.

    இந்த நிலையில் வடக்கு மாமல்லபுரம்-தேவநேரி கடற்கரை பகுதிகள் தற்போது கருப்பு மணல் கடற்கரையாக மாறி வருகிறது. கடல் அலையில் இருந்து வெளிவரும் இந்த கருப்பு மணல் கடற்கரையில் படிந்து தார் சாலை போன்று காட்சி அளிக்கிறது. மேலும் அதிகாலை சூரிய வெளிச்சத்தில் இந்த கருப்ப மணற்பகுதி ரம்யமாக காணப்படுகிறது.

    வித்தியாசமாக மாறி வரும் கடற்கரையில் ரிசார்ட்களில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் இன்று அதிகாலை நடைபயிற்சி சென்றபோது பார்த்து வியந்தனர். சூரிய உதயத்தில் ஒளிரும் கருப்பு மணல் பகுதியை பார்த்து உற்சாகம் அடைந்தனர். அந்த கருப்பு நிற மணலை கைகளில் அள்ளி வீசி மகிழ்ந்தனர்.

    இதுபோன்ற கருப்பு மணல் எரிமலை செயல்பாடுகள் அதிகமாக காணப்படும் கடற்கரை பகுதிகளில் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. இந்த மணலில் நடந்தால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இது போன்ற கருப்பு மணல் கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில் உள்ள தில்மதி கடற்கரையில் இருக்கிறது. சூரிய உதயம், அஸ்தமம் நேரங்களில் மின்னும் கருப்பு கடற்கரையை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் அங்கு கூடுவர், தற்போது மாமல்லபுரத்தில் கருப்பு மணல் கடற்கரை காணப்படுவது இயற்கை அதிசயமாக உள்ளது என்றனர்.

    • விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • கடலில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் மாமல்லபுரம் சுற்றுலாவருபவர்கள் மாமல்லபுரம், கல்பாக்கம், உய்யாலிகுப்பம், புதுப்பட்டினம் கடற்கரை பகுதிக்கு சென்று அங்குள்ள கடற்கரையில் பொழுதை கழிப்பது வழக்கம். அப்போது பலர் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளித்து வருகிறார்கள். இதனால் கடலில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்த கடற்கரை பகுதி மணல் திட்டு நிறைந்த ஆழமான பகுதியாகும். கடலில் இறங்கினால் மேடாக இருக்கும் மணல் திட்டானது, திடீரென ஆழமாகும். இதனால் கடலில் மூழ்கி பலர் உயிர் இழப்புக்கும் சம்பவங்கள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்த எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக கடற்கரையோரத்தில் எச்சரிக்கை பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    • ஆலப்புழா பகுதியில் மூங்கில்களால் தயாரித்து, வடிவமைக்கப்பட்ட 15 யானை சிலைகள் லாரி மூலம் கேரளாவில் இருந்து மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டது.
    • யானை சிலைகள் தற்போது கடற்கரைகோவில் புல்வெளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    மாமல்லபுரம்:

    சென்னையில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டு விருந்தினர்கள் பல்வேறு குழுக்களாக மாமல்லபுரம் வருகின்றனர். அதேபோல் வட மாநில சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வருகின்றனர். இந்த நிலையில் கடற்கரை கோவில் வளாகத்தில் மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு சிற்பத்தில் உள்ள யானை கற்சிற்பத்தை நினைவு படுத்தும் வகையில் கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியில் மூங்கில்களால் தயாரித்து, வடிவமைக்கப்பட்ட 15 யானை சிலைகள் லாரி மூலம் கேரளாவில் இருந்து மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டது.

    அந்த யானை சிலைகள் தற்போது கடற்கரைகோவில் புல்வெளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. குட்டி யானை முதல் பெரிய யானை வரை நிஜ யானைகள் கூட்டம், கூட்டமாக புல்வெளியில் மேய்வது போன்று தத்ரூபமாக ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளது.

    கடற்கரை கோவில் வளாகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் அசல் யானை போல் உள்ள மூங்கில் யானை சிலைகளின் அருகில் வந்து அதன் அழகை ரசித்து பார்த்து அவற்றின் முன்பு நின்று செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    வெளிநாட்டு பயணிகள் பலர் அசல் யானையே என்று அதன் அருகில் வந்து பார்த்து ஏமாந்து சென்றதையும் காண முடிந்தது.

    • பல்வேறு ஆன்மீக செயல்பாடுகள் நடக்கும் இடமாக மாமல்லபுரம் கடற்கரை உள்ளது.
    • பூஜைகள் செய்வதை கட்டுப்படுத்த இரவில் போலீசார் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடற்கரையானது சுற்றுலா பயணிகளுக்கு சூரிய குளியல், நடைபயிற்சி, அலைச்சறுக்கு விளையாட்டு, கடலில் குளிப்பது என மகிழ்ச்சியை கொடுக்கும் முக்கிய பொழுதுபோக்கு பகுதியாக இருந்தாலும், ஸ்தலசயன பெருமாள் கோயில் தீர்த்தவாரி, மூதாதையர் திதி, இருளர்களின் குலதெய்வ வழிபாடு, காணிக்கை, வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக செயல்பாடுகள் நடக்கும் இடமாகவும் உள்ளது.

    இப்பகுதி கடலோரத்தில் அண்மைக் காலமாக அவ்வப்போது ஏவல், பில்லி, சூனியம் வைக்கும் மர்ம நபர்கள் நள்ளிரவில் கடற்கரையில் அமர்ந்து ஜாமகால பூஜைகள் செய்வதாகவும், ஊழையிட்டு பேய் ஆட்டம் ஆடுவதாகவும் பேசப்பட்டு வந்தது. சமீபத்தில்

    கடற்கரை கோயில் தென் பகுதி கடலோரத்தில், கழுத்தை அறுத்து பூஜை செய்யப்பட்ட சேவல், மஞ்சள் குங்குமம் கலந்த பூசணிக்காய், துணி, ரிப்பன், மரப்பொம்மை உள்ளிட்ட ஜாமபூஜை பொருட்கள் கிடந்தன. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் முகம் சுழித்து சென்றனர்.

    இதுபோன்ற பூஜைகள் செய்வதை கட்டுப்படுத்த இரவில் போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கடல்சார் உயிரினங்களை பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து காக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் குறித்தும் உறுதிமொழி ஏற்றனர்.
    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடற்கரை கோயில் தென் பகுதி கடலோரத்தில், குவிந்து கிடந்த குப்பைகளை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்க திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இணைந்து அனைத்து வகை குப்பை கழிவுகளையும் அகற்றினர்.,

    பின்னர் கடல்சார் உயிரினங்களை பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து காக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் குறித்தும் உறுதிமொழி ஏற்றனர்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் அதிகாரி உதயகுமார், நிர்வாக தலைவர் சங்கர், மாவட்ட நிர்வாக அலுவலர்கள், மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • சூட்கேசில் வெடிகுண்டு இருக்குமோ? என்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • கடலில் விழுந்து யாரேனும் தற்கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், ஒத்தவாடை தெருவில் உள்ள கடற்கரை அருகே உள்ள கோயில் பகுதியில் நேற்று இரவு மர்ம சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சூட்கேசில் வெடிகுண்டு இருக்குமோ? என்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மர்ம சூட்கேசை கைப்பற்றி பத்திரமாக போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர்.

    இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் மற்றும் போலீசார் சூட்கேசை திறந்து சோதனை செய்தபோது அதில், குத்துவிளக்கு, குடை, கல்லூரி சான்றிதழ், குங்குமம், குழந்தைகள் நோட்டு என வீட்டு உபயோக பொருட்கள் இருந்தன.

    இதனை விட்டு சென்றது யார்? இந்த சூட்கேஸ் எப்படி இங்கு வந்தது? எதற்காக விட்டு சென்றனர்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலில் விழுந்து யாரேனும் தற்கொலை செய்தனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    • மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று காலை மாமல்லபுரம் கடற்கரையில் நடந்தது.
    • முன்னதாக நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய ஆட்டம் பாட்டத்துடன் விழா தொடர்ந்து நடைபெற்றது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடற்கரை கோவில் வடபகுதியில் மாசி மக விழாவை இருளர்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

    இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான இருளர்கள் குடும்பத்துடன் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் குவிந்து உள்ளனர். அவர்கள் குடில் அமைத்து தங்கி இருக்கிறார்கள். நேற்று நடைபெற்ற விழாவின்போது சுமார் 25-க்கும் மேற்பட்ட ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது பாரம்பரிய வழிபாடும் நடைபெற்றது.

    இன்று காலை மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி மாமல்லபுரம் கடற்கரையில் நடந்தது. முன்னதாக நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய ஆட்டம் பாட்டத்துடன் விழா தொடர்ந்து நடைபெற்றது.

    இந்தநிலையில் வாலிபர் ஒருவர் கையில் மாலையுடன் புது மாப்பிள்ளை கோலத்தில் கடற்கரையில் இறந்து கிடப்பதாக தகவல் பரவியது. இதனால் அங்கு குவிந்து இருந்த இருளர்கள் மத்தியில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது அது இருளர்கள் பற்றிய குறும்படத்திற்காக எடுக்கப்பட்ட படப்பிடிப்பு என்பதும், அதை தத்ரூபமாக எடுப்பதற்காக டிரோன் கேமரா வைத்து படப்பிடிப்பு நடத்தியதும் தெரிந்தது.

    இதையடுத்து படப்பிடிப்பு நடத்தியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    ×